வளங் கொழிக்கும் தஞ்சையில் கல்வி வளம் பரப்பும் தனிச்சிறப்புடைய பாரம்பரியமான மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி தோற்றம் முதல் சிறப்பாக இயங்கிவரும் துறைகளுள் தமிழ்த்துறையும் ஒன்று. தாய்த்தமிழைப் பயிற்றுவிக்கும் ஒரு துறையாக மலர்ந்து கடந்த 2011 - இல் இலக்கிய இளையர் , 2012-இல் முதுகலைத் தமிழ் , முனைவர் எனத் தொடர்ந்து வளர்ந்து வரும் துறையாக மலர்ந்துள்ளது. தமிழ்ப்புலத்தின் இலக்கணம், இலக்கியம், கல்வெட்டியல், அகராதியியல், நாட்டுப்புறவியல், ஊடகவியல் எனப்பல பிரிவுகளிலும் வல்ல ஆசிரியர்களைக் கொண்ட தனிச்சிறப்புடைய துறையாக எம் துறை விளங்குகின்றது.
தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஔவை.து.நடராசன், இலக்கிய வரலாற்று அறிஞர் மது.ச.விமலானந்தம், தென்னிந்தியப் பறவைகள் எனும் சிறந்த நூலை எழுதியவரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான முனைவர் க.ரத்னம், பாரதிதாசன் பல்கலைக்கழக பாரதிதாசன் ஆய்விருக்கைத் தலைவராக விளங்கிய முனைவர் இரா.இளவரசு போன்ற சான்றோர் பலர் பணியாற்றிய பெருமைக்குரிய துறை எம் தமிழ்த்துறை ஆகும்.
தமிழ்த்துறை, புதுதில்லி, பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, சென்னை, செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் ஆகியவற்றின் நல்கையின்பேரில் தொடர்ந்து கருத்தரங்கங்களை நடத்தி வருகின்றது. மாணவர் நலனுக்காகச் சிறப்புச் சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றது. தமிழ்த்துறை உயராய்வுமையத்தின்வழி இதுவரை ஆய்வாளர் 44 பேர் முனைவர்ப் பட்டம் பெற்றுள்ளனர்.
| Faculty
| Assistant Professor[Temporary]
| பயிற்றுவிக்கும் பாடப்பிரிவுகள்
தமிழ் இளங்கலை இலக்கியம் (பி.ஏ) மற்றும் முதுகலை ஆகியவற்றிற்கான பாட த்திட்டம் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறி காட்டுதலில் கல்லூரி இணைவு பெற்றுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பாடத்தெரிவு முறையில் அமைந்துள்ளது. இப்பாடத்திட்டம் தமிழியலின் பல்வேறு பிரிவுகளையும் தமிழ் கற்கும் மாணவரிடையே அறிமுகப்படுத்தி, அவற்றை மேலும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் மாணவரிடையே தமிழின் வளமான அறிவுச் செல்வத்தைக் கொண்டு சேர்த்து அவர்களின் மொழியறிவை வளர்க்க உதவுகின்றது. மாணவர்களின் அறிவை விசாலப்படுத்தித் துணை செய்யும் சிறப்பான விருப்பப் பாடங்களும் அமைந்துள்ளன. இது தமிழிலக்கிய வளத்தை வரலாற்று அறிவுடன் கற்பிப்பதுடன் நவீனத் தமிழ் வளர்ச்சியையும் உணர்த்தும்.
இலக்கியத்தின் பன்முகத்தன்மை, இலக்கண வளம், தமிழர் வரலாறு, நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், கல்வெட்டியல், மொழியியல், ஒப்பிலக்கியம் எனப் பலவகைத் துறையிலான செய்திகளையும் அறியும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஊடகத்துறையில் பங்கேற்க ஏதுவாக மக்கள் தகவல் தொடர்பியல், பிழையில்லா மொழி ஆளுமை வளர்வதற்கான பயன்முறைத்தமிழ் ஆகிய பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மாணவர்களின் ஆய்வுத் திறனை வளர்ப்பதற்காக முதுகலைப் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆராய்ச்சி நெறிமுறைகள் பாடமாகக் கற்பிக்கப்படுவதுடன் நான்காம் பருவத்தில் ஆய்வுத்திட்டக் கட்டுரை அளிப்பதும் இக்கல்விமுறையில் இடம்பெற்றுள்ளது.
| முனைவர்ப் பட்ட ஆய்வு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற தமிழ் உயராய்வு மையமாக எம் துறை விளங்குகின்றது. பத்துப் பேராசிரியப் பெருமக்கள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நெறியாளராக இருந்து வருகின்றனர். இத்துறையின் கீழ் இலக்கணம், இலக்கியம், நாட்டுப்புறவியல், வரலாற்றியல், அகராதியியல், பொருண்மையியல் முதலான பொருண்மைகளில் ஆய்வு நிகழ்த்தி 35க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் முனைவர்ப் பட்டத்திற்குத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
| ஆய்வுத்திட்டம்
பல்கலைக்கழக் மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவற்றின் நிதி நல்கையுடன் ஆய்வுத் திட்டங்கள் சிறப்புறச் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் நிதி நல்கையின் கீழ் மாணவர் ஆய்வு நல்கையும் பெறப்பட்டு முதுகலை ஆய்வாளர்கள் இருவர் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர்.
வ.எண் | ஆய்வு ஒருங்கிணைப்பாளர் | நிதி நல்கை | தலைப்பு | ஆண்டு |
1 | முனைவர் மா.கோவிந்தராசு (முனைவர் பி.மாரியப்பன் – இணை ஆய்வு ஒருங்கிணைப்பாளர்) | செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் உரூ.2,50,000 | செவ்விலக்கியங்களில் ஊர்வன | 2011-12 |
2 | முனைவர் மா.கோவிந்தராசு | பல்கலைக்கழக மானியக்குழு நிதி நல்கை – குறுங்கால ஆய்வுத் திட்டம் (UGC– Minor Research Project) | வானம்பாடிக் காலக் கவிதைகளில் தொன்ம வெளிப்பாடு | 2014-16 |
| ஆய்வுத்திட்டம் மாணவர் ஆய்வுத்திட்டம்
வ.எண் | மாணவர் – ஆய்வு நெறியாளர் | நிதி நல்கை | தலைப்பு | ஆண்டு |
1 |
பெ.ரவிச்சந்திரன்
முனைவர் மா.கோவிந்தராசு |
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் (TANSCHE) உரூ.15,000 | தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடு | 2017-2018 |
2 |
இரா.ரஞ்சிதா
முனைவர் மா.கோவிந்தராசு |
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் (TANSCHE) உரூ.15,000 | திருக்குறளில் அளபெடை | 2018-2019 |
| முனைவர்ப் பட்ட ஆய்வாளர் விவரம்
மாணவர்களுக்குப் பல்துறை அறிவும் பல்வேறு அறிஞர் சிந்தனைகளும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கில் தேசியக் கருத்தரங்குகளும் சிறப்புச் சொற்பொழிவுகளும் தொடர்ந்து நடத்தபெற்று வருகின்றன.
ஆண்டு | நிலை | நிதி நல்கை | ஒருங்கிணைப்பாளர் | தலைப்பு |
2012-2013 | மாநில அளவு | செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 05-09-2012 | முனைவர் மா.கோவிந்தராசு | செவ்விலக்கியங்களில் ஊர்வன |
2013-2014 | தேசிய அளவு | செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 22.01.2014 – 24.01.2014 | முனைவர் மா.கோவிந்தராசு | மொழியியல் நோக்கில் தொல்காப்பிய உரைகள் |
2014-2015 | தேசிய அளவு | செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 20.01.2015– 22.01.2015 | முனைவர் த.இளஞ்செழியன் | தொல்காப்பிய இலக்கிய மரபு நோக்கில் கீழ்க்கணக்கு நூல்கள் – அக, புறக் கோட்பாடுகள் ஒப்பீடு |
2017-2018 | தேசிய அளவு | பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நல்கை 04.10.2017 | முனைவர் து.ரோசி | தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் |
2017-2018 | தேசிய அளவு | செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 06.12.2017 – 08.12.2017 | முனைவர் மா.கோவிந்தராசு | தொல்காப்பியரின் உருபனியற் கோட்பாடு |
2017-2018 | தேசிய அளவு | பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நல்கை 04.04.2019 | முனைவர் து.ரோசி | தமிழின் பன்முகப் பரிமாணங்கள் |
2019 - 2020 | தேசிய அளவு | பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நல்கை 19.03.2020 | முனைவர் இரா.வரதராஜா | பதினெண்கீழ்க்கணக்கு – பன்முகப் பார்வை |
| புத்தக வெளியீடுகள்